சென்னையை அடுத்த தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவக் கழிவு எரிக்கும் ஆலையில், வடக்கு மண்டல காவல் துறைக்கு உட்பட்ட 10 மாவட்டங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 1,925 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் இங்கு கொண்டு வரப்பட்டு எரிக்கப்பட்டன. தாம்பரம், ஆவடி மாநகர காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நீதிமன்ற உத்தரவுக்குப் பின் இங்கு கொண்டு வந்து எரித்து அழிக்கப்படுவது வழக்கம்.