காஞ்சிபுரம் மாவட்ட அரசு விருந்தினர் மாளிகையில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ். பி. கே. தென்னரசு தலைமையில், மாவட்ட கலெக்டர் சினேகா முன்னிலையில் மாவட்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் இன்று (மே. 24) நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், சார் ஆட்சியர் ஆஷிக் அலி, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு அமைச்சர் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.