இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35வது நினைவு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இன்று (மே 21) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.