காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய நான்கு சட்ட மன்ற தொகுதிகளில் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் மூலம் 65,270 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தற்போது மாவட்டத்தில் மொத்தம் 11,92,194 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்ட ஆட்சியர் இந்த விவரங்களை வெளியிட்டார். இந்த தகவலை அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.