முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுகவினர் 47வது வார்டு பகுதியில் கிரிக்கெட் போட்டி நடத்தினர். இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு மாவட்ட கழக செயலாளர் சாமி சுந்தரம், மாமன்ற உறுப்பினர் பிரேம்குமார் முன்னிலையில் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் வாலாஜாபாத் கணேசன், எஸ் எஸ் ஆர் சத்யா, வள்ளிநாயகம், சோமசுந்தரம், ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.