ஸ்ரீபெரும்புதுாரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவன ஊழியர் அரிராமன் (40) இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.