இந்த மலைக்கோவிலில், தினமும் காலை, மாலை நேரங்களில், பூஜையுடன், மாதத்தில் இரண்டு முறை பிரதோஷ வழிபாடும் நடத்தப்படுகிறது.
அந்த வகையில், வைகாசி மாத பிரதோஷமான நேற்று, கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
பிரதோஷத்தை யொட்டி, மாலை 5: 00 மணிக்கு, சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட மங்கள திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து, உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் கோவிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தார்.
இதில், சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர்.