காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் குவிக்கப்பட்ட போலீஸ்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள தங்க பல்லி மாயமானதாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன் என்பவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், டி.எஸ்.பி. சம்பத் தலைமையில் போலீசார் கோவிலுக்குச் சென்று சிலைகளை ஆய்வு செய்தனர். மேலும், கோவில் பட்டாச்சாரியார்கள், ஸ்தானிகர்கள், மணியக்காரர், அறங்காவலர் உள்ளிட்டோரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி