காஞ்சிபுரம் அத்தி வரதர் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் ஆசிய பண்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் "வரலாற்றில் காஞ்சிபுரத்தை சுற்றி நடந்த போர்கள்" என்ற தலைப்பில் ஓவியக் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி, ஜூன் 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இயற்கை வர்ண ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இக்கண்காட்சியில் காலை 10 மணிக்கு சொற்பொழிவும், மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.