முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக உரிமை மீட்புக் குழுவில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் ஆ. வீ. இரஞ்சித் குமார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக விலகுவதாக அறிவித்துள்ளனர். கட்சி ரீதியாக எடுக்கப்படும் கூட்டணி முடிவுகளில் ஓ. பன்னீர்செல்வம் காட்டி வரும் தாமதமே இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மொத்தமுள்ள 88 மாவட்டச் செயலாளர்களில் 77 பேர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கலாம் என்று விருப்பம் தெரிவித்தும், தலைமை இதுவரை எந்த முன்னேற்றமும் எடுக்காதது குறிப்பிடத்தக்கது.