பல்லாவரத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 2 20வது வார்டு அயோத்திதாசர் பண்டிதர் சாலையில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இரண்டு வார்டுகளுக்கு ஒரே நியாயவிலை கடை இருந்ததால் பொதுமக்கள் வெகு நேரமாக வரிசையில் நின்று பொருட்கள் வாங்குவதில் சிரமம் ஏற்பட்டதால் மிகுந்த அவதியடைந்தனர். 

இதனையடுத்து நியாயவிலை கடை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாமன்ற உறுப்பினர் முத்துகுமார் ஏற்பாட்டில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி