இவர்கள் ஒரகடம், மகேந்திரா சிட்டி, மறைமலை நகர், தாம்பரம் 'சிப்காட்' பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தனியாக வசிப்பதால், மூன்று வேளை உணவையும் தொழிற்சாலை கேன்டீன், ஹோட்டல்கள், விடுதி கேன்டீன்களில் சாப்பிடுகின்றனர். இங்கு உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர், காய்கறி, எண்ணெய், மசாலா பொருட்கள் உள்ளிட்டவை தரமானதாக இல்லை. பரனூர், செங்கல்பட்டு சந்தைகளில் இருந்து, இரண்டாம் தரமான காய்கறிகளே அதிக அளவில் வாங்கி வந்து, சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
அத்துடன், சுவை மற்றும் நிறத்தைக் கூட்ட, 'அஜினோமோட்டோ' மற்றும் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. சாதம் நன்கு வெள்ளையாக தெரிய வேண்டும் என்பதற்காக, அரிசியில் சுண்ணாம்பு கலந்த தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.