முடிச்சூர் அருகே பரத், சீனு ஆகிய கானா பாடகர்கள் கொலையில் தொடர்புடைய போதை ஆசாமிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பான அவரது அறிக்கையில், ஆட்சி மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என்பதுபோல் இந்த காவல்துறை தற்போது சரியான மேய்ப்பன் இல்லாமல் தறிகெட்டு ஓடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தமிழகத்தை ஆளும் பொய்க்கால் குதிரை அரசு சட்ட ஒழுங்கை காக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.