காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில், ஶ்ரீபெரும்புதூர் தவெக எம்எல்ஏவும் அமைச்சருமான தென்னரசு மே 19 அன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மகப்பேறு, டயாலிசிஸ், பெண்கள் வார்டுகளில் சிகிச்சை பெறுவோரிடம் சிகிச்சை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். மருத்துவமனை முதன்மை மருத்துவர் ஜெயபாரதி, இரவு நேரங்களில் காவலர்கள் நியமிக்க எம்எல்ஏவிடம் கோரிக்கை விடுத்தார். மருத்துவமனையில் இருந்த சில குறைகளை உடனடியாக சரி செய்ய எம்எல்ஏ உத்தரவிட்டார்.