தீ விபத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள ஹூண்டாய் மொபைஸ் நிறுவனம் சில தினங்களுக்கு முன் பயங்கர தீ விபத்தில் சிக்கி முற்றிலும் எரிந்து நாசமானது. இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் கீர்த்தனா, வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ) ஆகியோர் நேற்று (ஜூன். 2) சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டனர். இவர்களுடன் மேலாண்மை இயக்குநர் ராமன், கலெக்டர் சினேகா, உத்திரமேரூர் எம்எல்ஏ முனிரத்தினம், ஆலந்தூர் எம்எல்ஏ ஹரீஷ் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி