மதுராந்தகத்தில் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் இந்து மேல்நிலைப் பள்ளியில் உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மற்றும் உடல் உறுப்பு தானம் ஆலயம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் மற்றும் உடல் உறுப்புகள் தான பதிவு ஆகியவை டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் நிறுவனரும் மாநில தலைவருமான ஜெயப்பிரகாஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 42 பேர் ரத்த தானம் வழங்கினர் மற்றும் 35க்கும் மேற்பட்டோர் உடல் உறுப்புகள் தானம் வழங்க பதிவு செய்தனர். இந்த ரத்ததான முகாமில் மதுராந்தகம் காவல் ஆய்வாளர் பரந்தாமன், வணிகர் சங்க நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள், அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.