அச்சரப்பாக்கம் ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயிலில் மகா தீபம்

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் நகரில் உள்ள வஜ்ரகிரி மலை உச்சியில் அமைந்துள்ள ஸ்ரீ மரதாம்பிகை உடனுறை ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத மகா தீபம் ஏற்றப்பட்டது. விநாயகர், பசுபதீஸ்வரர், மரகதாம்பிகை, வஜ்ரகிரிவேலன் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு மூல தீபம் ஊரின் மையப்பகுதியில் ஏற்றப்பட்டு, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து மலை உச்சியை அடைந்தது.

தொடர்புடைய செய்தி