காஞ்சி: 'விஜய் கட்சி கூட்டம் சினிமா கச்சேரி போன்று நடக்கிறது'

காஞ்சிபுரம் வழக்கத்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த எம்.பி. கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருந்தால் எத்தனை முனை கூட்டணியாக இருந்தாலும் வெற்றி பெறும் என்பது என்னுடைய கணிப்பு. விஜய் கூட்டத்தில் அசம்பாவிதம் நடைபெற்றதால் அவர் கூட்டத்திற்கு அதிகமாக நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது. விஜய் கூட்டம் வழக்கமான கட்சி கூட்டம் போல் நடைபெறுவதில்லை, ஏதோ சினிமா கச்சேரி போன்று தான் நடைபெறுகிறது ஆகையால் அதற்கு நிபந்தனைகள் அதிகமாக விதிக்கப்படுவதாக" அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி