வழக்கறிஞர் பாதுகாப்பு மாநாடு தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.சி. மதன்ராஜ் தலைமையில் செயலாளர் ஆர். அய்யாவு முன்னிலையில் நடைபெற்ற இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பி.எஸ். அமல்ராஜ், கலந்துகொண்டு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு பற்றியும் உரையாற்றினார். அதனை தொடர்ந்து வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டம் இயற்றிடவும், சேமநல நிதி ரூபாய் 25 லட்சம் வழங்கிடவும், தமிழை வழக்காடு மொழியாக்கிடவும், உச்சநீதிமன்ற கிளை தமிழகத்தில் அமைத்திடவும் உள்ளிட்ட பல்வேறு 10 தீர்மானங்கள் வழக்கறிஞர்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டன. இதில் 1000 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரம் நகரம்
கோனேரிகுப்பம் கழிவுநீர் தேக்கம்: மக்கள் அவதி, அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை