செங்கல்பட்டு: மழைநீர் தேக்குவதால் கூடுவாஞ்சேரியில் அவதி

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சிக்னல் அடுத்துள்ள சீனிவாசபுரம் பகுதி ஜி.எஸ்.டி. சாலையில், அணுகுசாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. 

இந்த சாலை அருகில் வங்கிகள், தபால் நிலையங்கள் உள்ளன. இங்கு பல்வேறு பணிகளுக்காக செல்வோர், மழைநீர் தேங்குவதால் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகளும் சில நேரம் தடுமாறி விழுகின்றனர். எனவே, சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, 'பிளீச்சிங் பவுடர்' தெளித்து பொதுமக்கள் பாதுகாப்பாக சென்று வர, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி