காஞ்சிபுரம்: விஜயை கடுமையாக விமர்சித்த அமைச்சர் அன்பரசன்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அன்பரசன், நடிகர் விஜய் தனது படங்களில் சிகரெட் மற்றும் மது அருந்துவதைக் காட்டி இளைஞர்களைச் சீரழித்ததாகக் குற்றம் சாட்டினார். நேற்று வந்தவர்கள் திமுக-வுடன் ஒப்பிடுவது அவமானமென வேதனை தெரிவித்த அவர், விஜய் இதுவரை பாஜக-வை விமர்சிக்கவில்லை என்றும், சிறுபான்மையினர் வாக்குகளைப் பிரிக்க ரகசிய ஒப்பந்தம் போட்டு களமிறங்கியிருப்பதாகவும் பகிரங்கமாகக் கூறினார். கூட்டத்தைப் பார்ப்பது வாக்குகளாக மாறாது என்றும் மறைமுகமாகச் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்தி