காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் சிப்காட்டில் உள்ள டிவி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் இன்று (மே. 30) காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 600 பேர் வேலை செய்யும் இந்த நிறுவனத்தில் அபாய எச்சரிக்கை மணி ஒலிக்கச் செய்து அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.