காஞ்சிபுரம்: கோர விபத்து.. தாய் கண் முன் மகன்கள் பலி

காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி கிராமத்தில், குளோரி (38) தனது இரு மகன்கள் யுவராஜ் (18), சந்தோஷ் (16) உடன் வசித்து வந்தார். காய்கறி சந்தைக்கு ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில், யுவராஜ், சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளோரி படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலுச்செட்டிச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி