காஞ்சிபுரம்: மீண்டும் வெடித்த வடகலை தென்கலை பிரிவினர் மோதல்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் நான்காவது நாளான நேற்று (மே. 31) சந்திரபிரபை வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜப் பெருமாளுக்கு பாராயணம் பாடுவது, பிரசாதம் பெறுவது தொடர்பாக வடகலை, தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவலர்கள் தலையிட்டு நிலைமையைச் சீர் செய்தனர். வரதராஜ சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகிறார்.

தொடர்புடைய செய்தி