காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம் சாலையில் நேற்று முன்தினம் (மே. 23) இரவு, சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்தவர்கள் உடனடியாக கீழே இறங்கி உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.