செலிலிமேடு பகுதியைச் சேர்ந்த முருகவேல் (26), அன்பு (21), ஜனகுமார் (21), மணிபாரதி (23), தனுஷ் (21) ஆகிய ஐந்து பேர் கொலை வழக்கில் காஞ்சிபுரம் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இவர்கள் ஐந்து பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காஞ்சிபுரம் எஸ்பி ஜவகர் மாவட்ட ஆட்சியர் சினேகாவிற்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, இவர்கள் 5 பேரையும் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க ஆணை வழங்கப்பட்டது. இந்த ஆணையை போலீசார் வேலூர் சிறை நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.