காஞ்சி: மூதாட்டி தவற விட்ட கைப்பையை மீட்டு கொடுத்த போலீசார்

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி லோகம்மாள், பேருந்து நிலையத்தில் பொருட்கள் வாங்கும் போது தனது கைப்பையை தவறவிட்டார். அதில் 2.5 சவரன் தங்கச் செயின் மற்றும் ரூ. 2,000 பணம் இருந்தன. இது குறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கைப்பை ஒரு பள்ளத்தில் விழுந்து கிடந்ததைக் கண்டறிந்தனர். நேற்று, சிவகாஞ்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுரேஷ், மூதாட்டி லோகம்மாளை அழைத்து கைப்பையை பத்திரமாக ஒப்படைத்தார்.

தொடர்புடைய செய்தி