காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்த கண்ணன் என்பவரின் செல்போனை திருடி ஓடிய மனோஜ் என்ற சிபி (30) என்பவரை சிவகாஞ்சி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த கண்ணன் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மனோஜ் என்பவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.