காஞ்சிபுரம் தாலுகா புத்தேரி கிராமத்தில் நெல் வைக்கோல் சேகரிக்கச் சென்ற 12-ம் வகுப்பு மாணவர் விஸ்வநாதன் (18) வயல்வெளியில் வைக்கோல் எடுக்க சென்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து பொன்னேரி கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.