காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அத்திவாக்கம் கிராம சமுதாய கூடத்தில், சிறுவேடல் கிராமத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க. செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன் ஆகியோர் பட்டாக்களை வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பா. முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி. க. ஆர்த்தி, காஞ்சிபுரம் சார் ஆட்சியர் திரு. ஆஷிக் அலி, வாலாஜாபாத் ஒன்றியக் குழுத்தலைவர் திரு. ஆர். கே. தேவேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.