வேல் பூஜை செய்ய ஊர்வலமாக வந்த ஹிந்து பரிஷத் அமைப்பினர் கைது

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நிறைவையொட்டி, திங்கள்கிழமை அன்று விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பாஜகவினர் அனுமதி இன்றி வேல் பூஜை நடத்த முயன்றனர். இந்து சமய அறநிலையத்துறையினரும், போலீசாரும் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் வேலுடன் கோவிலில் நுழைய முயன்றபோது போலீசார் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி