காஞ்சி: வெள்ளி தேரில் எழுந்தருளிய காமாட்சி அம்மன்

காஞ்சிபுரத்தில் பிரம்மோற்சவ உற்சவத்தின் 10-ம் நாள் இரவு, நீல நிறப்பட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிந்து, பல்வேறு மலர் மாலைகளுடன் காஞ்சி காமாட்சியம்மன் லட்சுமி, சரஸ்வதி தேவியர்களுடன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்க, வேதப்பாராயண கோஷ்டியினர் பாடி வர, காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் அம்மன் வலம் வந்தார். வெள்ளி தேர் உற்சவத்தை ஒட்டி வண்ணமயமான சிறப்பு வானவேடிக்கையும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி