உலகப் புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இந்த முக்கிய நிகழ்வின் ஒரு பகுதியாக, தங்க பல்லக்கு உற்சவம் பிப்ரவரி 25ஆம் தேதியும், ரத உற்சவம் பிப்ரவரி 27ஆம் தேதியும், வெள்ளி தேர் உற்சவம் மார்ச் 1ஆம் தேதியும் நடைபெறும். மார்ச் 4ஆம் தேதி விடையாற்றி உற்சவத்துடன் இந்த பிரம்மோற்சவம் நிறைவடையும்.