இதனால் ஆத்திரமடைந்த விஜயலட்சுமி செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் உள்ள நேரபதிவாளர் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் விஜயலட்சுமி தெரிவித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காமல் மௌனமாய் அதிகாரிகள் சென்றுவிட்டனர். இதுகுறித்து விஜயலட்சுமி தெரிவிக்கையில் அரசு பேருந்தில் மகளிர்களுக்கு மரியாதை இல்லையெனவும், அரசு பேருந்தில் ஓட்டுநர் தன்னையும், தன்னுடன் பேருந்தில் பயணித்த முதியவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசியதாக குற்றச்சாட்டு தெரிவித்தார். அரசு பேருந்தில் பயணிக்கும் பெண்பயணிகளை மரியாதை குறைவாகவும், மரியாதை இன்றியும் நடத்துவதாக பெண் பயணி விஜயலட்சுமி குற்றச்சாட்டு தெரிவித்தார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு