பனையூரில் தவெக அவசர ஆலோசனை கூட்டம்

சென்னை ஈசிஆர் சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பு வழங்குவதற்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகின்றது. இதற்காக அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது தலைமை அலுவலகம் வந்துள்ளார். 

ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், விடுபட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு இன்று திருவாரூர், தென்காசி மாவட்டங்களில் சேர்ந்த நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்படும் என தெரிகிறது. தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் புதிதாக முக்கிய பிரமுகர்கள் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

விருப்ப ஓய்வு பெற்ற வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் பதவி வகித்து வந்த ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் தவேக் கட்சியில் இணையவுள்ளதாகவும், அவருக்கு பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்க உள்ளதாகவும் தெரிகிறது. அதேபோல், அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜலட்சுமி மற்றும் வால்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சுபாஷ் ஆகியோர் இன்று விஜய் முன்னிலையில் கட்சியில் இணைய உள்ளதாகவும், விஜயின் வழக்கறிஞராக இருக்கக்கூடிய குமரேசன் கட்சியில் இணைவதாகவும், அவருக்கும் வழக்கறிஞர் பிரிவில் ஒரு பொறுப்பு வழங்க உள்ளதாகவும் தெரிகிறது.

தொடர்புடைய செய்தி