மாமல்லபுரம் நகர செயலரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட பொருளாளருமான விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தம் அருகே திமுகவினருடன் கழக கொடியை ஏற்றி வைத்து கருணாநிதியி்ன் திருவுருவ சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவியருக்கு நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணப் பொருட்களை திமுகவினர் வழங்கினர். நிகழ்ச்சியில் இளைஞரணி பொறுப்பாளரும் மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலருமான மோகன்குமார், திமுக பொறுப்பாளர் அருண்குமார், நகராட்சி கவுன்சிலர் பூபதி உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.