செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சியில் ஜோதி நகர் கிளை கழகம் சார்பில் கிளைக் கழக செயலாளர் தொழிலதிபர் கே ஏ டி அன்பு தலைமையில் கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது கேளம்பாக்கம் ஊராட்சி மகளிரணி பொறுப்பாளர் தனக்கோட்டி அன்பு முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் ஒன்றிய குழு பெருந்தலைவரும், முன்னாள் எம்எல்ஏவும் திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலருமான எஸ் ஆர் எல் இதயவர்மன் கலந்துகொண்டு கட்சி அலுவலகத்தை ரிப்பின் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றி வைத்தும் திறந்து வைத்தார், அதனைத் தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் திமுக கொடி ஏற்றப்பட்டதுடன் வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் அன்புச்செழியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்பிரஸ் எல்லப்பன் திருப்போரூர் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெண்பேடு ரமேஷ் உள்ளிட்ட கேளம்பாக்கம் திமுக நிர்வாகிகள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?