காஞ்சிபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. தி. சினேகா இ. ஆ. ப. அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். அ. நளினி அவர்களும் உடன் இருந்தார். தேர்வு மையத்தின் ஏற்பாடுகள் மற்றும் மாணவர்களின் நலன் குறித்து அவர் கேட்டறிந்தார்.