குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினர்

காஞ்சிபுரம் தியாகி நடுநிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ/மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப. , புத்தகங்கள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி. மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் மரு. த. ரா செந்தில், முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். அ. நளினி, மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் சுப்பராயன், கார்த்திக் ஆகியோர் உடனிருந்தனர். தேசிய குடற்புழு நீக்க நாளை சிறப்பிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தொடர்புடைய செய்தி