காஞ்சிபுரம்: குடிநீர் கினற்றில் அழுகிய நிலையில் சடலம்; மக்கள் அதிர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மணிமங்கலம் ஏரியில் உள்ள குடிநீர் கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று (மே 14) குடிநீர் கிணற்றில் துர்நாற்றம் வீசியதை அடுத்து பொதுமக்கள் பார்த்தபோது இந்த சம்பவம் தெரியவந்தது. தகவலறிந்து வந்த மணிமங்கலம் போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி