காஞ்சிபுரம்: மருத்துவமனை வளாகத்தில் காகங்கள் இறப்பு

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் காகங்கள் இறந்து விழுந்துள்ளன. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக காகங்கள் இறந்து வருவதாகவும், இதுவரை 20க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. நேற்றும் இரண்டு காகங்கள் இறந்தன. உயிரிழந்த காகங்களை ஊழியர்கள் பாதுகாப்புடன் அகற்றி புதைக்கின்றனர். காகங்கள் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி