இதில் சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலரும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான தா.மோ. அன்பரசன் மற்றும் தலைமை கழக பேச்சாளரும், எழுத்தாளருமான நாஞ்சில் சம்பத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் பிறந்த நாளை தொடர்ந்து பேச்சுப்போட்டி, விளையாட்டுப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் முதல் இடம் பிடித்த பேச்சாளருக்கு ரூ.10,000, இரண்டாம் இடம் பிடித்த பேச்சாளருக்கு ரூ.8,000 மற்றும் மூன்றாம் இடம் பிடித்த பேச்சாளருக்கு ரூ.5,000 மற்றும் பெண்களுக்கு தையல் மெஷின், பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உபகரண பொருட்களுடன் ஸ்கூல் பேக், பெண்களுக்கு எவர்சில்வர் குடம் என ரூ.5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் ஆகியோர் வழங்கினர்.