செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (15-11-2025) மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் என மதுராந்தகம் செயற் பொறியாளர் ரங்கநாதன் (பொறுப்பு) தெரிவித்துள்ளார். மதுராந்தகம், மறைமலைநகர் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்கள் மற்றும் தொழிற்பேட்டைகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.