காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனையில், இறைத்துளிகள் இயக்கம் சார்பில் மே 17 அன்று காலை முதல் பிற்பகல் 1 மணி வரை இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பல்வேறு சேவை அமைப்புகள் மற்றும் மருத்துவ சங்க தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். தன்னார்வலர் தி.மோகன் விழுதுகள் காஞ்சி அன்னசத்திரம் கூறுகையில், "நாம் அனைவரும் வருடத்தில் 2 முறை அல்லது 3 முறையாவது ரத்த தானம் செய்ய வேண்டும். இரத்த தானம் செய்வதால் நம் உடலுக்கும் நல்லது, நிறைய உயிர்களை காப்பாற்றுவதற்கும் உதவியாக இருக்கும்" என்றார்.