திருக்கழுக்குன்றத்தில் திமுக சார்பில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 2000 பேருக்கு பிரியாணி உணவு பேரூராட்சி தலைவர் யுவராஜ் வழங்கினார். இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை திருநாளான இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட 10வது வார்டு கவுன்சிலர் தௌலத் பீவி ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு அசைவ உணவு (பிரியாணி) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு ஜாகிர் உசேன் தெருவில் வசிக்கும் 2000க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணியை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் சத்தியமூர்த்தி, திமுக நிர்வாகிகளான அஹமது பாஷா, பாரூக், சரவணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.