அதைத் தொடர்ந்து, மாணவ குழுவினர் விழிப்புணர்வு வாசக டி-ஷர்ட் அணிந்து, வெண்ணெய் உருண்டை பாறை, ராயர் கோபுர பகுதிகளில் உள்ள பாறை குன்றுகளில், காலி குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில், நொறுக்குத்தீனி பாக்கெட் ஆகியவற்றை அகற்றினர். குப்பை இடுவதை தவிர்க்க வேண்டும் என, பயணியரிடம் வலியுறுத்தினர்.
துாய்மை சேவை குறித்து, அவர்கள் உறுதிமொழி ஏற்றனர். பாரம்பரிய சின்னங்கள் பற்றி, வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில், அவற்றை சேதப்படுத்தாமல் பாதுகாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.