இந்நிலையில், பெருங்கோழியில் தனியாக வசித்து வரும் பாலாஜி, கடந்த 20ம் தேதி, வீட்டு வாசலில் நிலைத்தடுமாறி விழுந்துள்ளார். அப்போது, தலையில் காயம் ஏற்பட்ட அவரை, உறவினர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவர் நேற்று (ஜூலை 30) இரவு உயிரிழந்தார். இதுகுறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.