காஞ்சி - செங்கை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், நலத்திட்ட உதவிகள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யவும், இயற்கைச் சீற்றங்கள் மற்றும் நோய்த்தொற்று காலங்களில் அவசரப் பணிகளைக் கவனிக்கவும் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து இன்று (ஜூன் 3) உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏவும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான தென்னரசு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தாம்பரம் எம்எல்ஏவும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சரத்குமார் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி