பல்லாவரம் அனகாபுத்தூரைச் சேர்ந்த ஜோயல் சைமன் பிராங்கிளின் (33) தனது மனைவி ஜூனுஶ்ரீ (27), குழந்தையுடன் குடகு மாவட்டத்தில் உள்ள துபாரே யானைகள் முகாமிற்கு சுற்றுலா சென்றார். அங்கு காவிரி ஆற்றில் யானையின் அருகே புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, கஞ்சன், மார்த்தாண்டா என்ற இரண்டு யானைகள் சண்டையிட்டன. இந்த சண்டையில் நடுவில் சிக்கிய ஜூனுஶ்ரீ, யானை மிதித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கணவர் மற்றும் குழந்தையுடன் அவர் மனைவியை மீட்க போராடிய வீடியோ நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.