காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று (மே. 19) தவெக எம்எல்ஏ ரஞ்சித்குமார் ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரப் பணிகள் துறை இணை இயக்குநர் நளினி, கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் வினோத் ஆகியோரை சந்தித்து வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவு அறைக்கு ஒரு மாதத்தில் ஏசி வசதி செய்து தரப்படும் என உறுதியளித்தார்.